முதல் இன்னிங்ஸ் டிரா... வெற்றிப்பெற இனி இந்தியா என்ன செய்ய வேண்டும்? பிட்ச் ரிப்போர்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதிஷ் ரெட்டியை பார்த்து பும்ரா, ஆகாஷ் தீப் இருவரும் கற்றுக் கொண்டனர். நிதிஷ் ரெட்டி, ஒரு ஓவரிலேயே 2 விக்கெட்களை சாய்த்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியும் 387 ரன்களை அடித்து டிரா செய்த நிலையில், இப்போட்டி தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
இலண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இரு அணிகளும் 387/10 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையின் பலத்தை, மூன்றாவது டெஸ்டில் நிரூபித்தார்கள்.
254/5 என இந்திய அணி தடுமாறியபோது, 330 ரன்களுக்குள் ஆல்அவுட் ஆக வாய்ப்பு இருக்கிறது எனக் கருதப்பட்டது. ஆனால், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு, மூவரும் இணைந்து, 125 ரன்களை அடித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதிஷ் ரெட்டியை பார்த்து பும்ரா, ஆகாஷ் தீப் இருவரும் கற்றுக் கொண்டனர். நிதிஷ் ரெட்டி, ஒரு ஓவரிலேயே 2 விக்கெட்களை சாய்த்தார்.
இப்படி, ஆல்-ரவுண்டர்கள் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதால், இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் 387/10 ரன்களை அடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணியும் இதே ரன்களைதான் எடுத்தது.
டெஸ்ட் வரலாற்றில், இரு அணிகளும், முதல் இன்னிங்ஸில் ஒரே மாதிரி ஸ்கோரை அடிப்பது, இது 9ஆவது முறையாகும். அதிலும், இரு அணிகளும் 387 என்ற பெரிய ஸ்கோரை அடித்திருப்பதும், இதுதான் முதல்முறை.
இந்த 9 முறையில், அடிக்கப்பட்ட டாப் 4 முதல் இன்னிங்ஸ் டிரா ஸ்கோர்களால், அப்போட்டியே டிராவில்தான் முடிந்திருக்கிறது. தற்போது, லார்ட்ஸ் டெஸ்டும் டிராவை நோக்கிதான் நகர்ந்து வருகிறது. மூன்று நாட்களை இழந்துவிட்டனர்.
இன்னமும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதில், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து, 450 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். அடுத்து, இந்திய அணியும் இந்த இலக்கை துரத்த வேண்டும். இதை வைத்து பார்க்கும்போது, இப்போட்டி டிராவை நோக்கி நகர்வதாகதான் தெரிகிறது.
வழக்கத்திற்கு மாறாக, இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தை, பேட்டிங்கிற்கும் சாதகமாக வடிவமைத்தனர். இதுதான், தற்போது பிரச்சினையாக மாறியுள்ளது. முதல் மூன்று நாட்களிலும், பேட்டர்களால் ரன்களை அடிக்க முடிந்தது.
கடைசி இரண்டு நாட்களிலும் இதே நிலைமைதான். 4ஆவது நாளில், பேட்டர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். வெயில் அதிகமாக இருந்ததால், பௌலிங் பிட்சில் புட்களும் இல்லை. ஸ்விங், பவுன்ஸும் சற்று குறைவாகதான் இருக்கும்.
5ஆவது நாள் அப்படி இருக்காது. ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைப்பு இருக்கும். ஆனால், இந்திய அணி பேட்டர்களால், சுழற்பந்து வீச்சை திறம்பட எதி்ர்கொள்ள முடியும் என்பதால், இப்போட்டி டிராவை நோக்கி நகரத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
மூன்றாவது நாளின் கடைசி செஷனில், கடைசி இரண்டு ஓவர்களில் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது, ஜாக் க்ரோலி, தொடர்ச்சியாக நேரத்தை வீணடிக்க ஆரம்பித்தார்.
முதல் ஓவரில், பும்ரா வீசிய 2ஆவது பந்தில், 2 ரன்களை அடித்துவிட்டு, அதிக நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதனால், இந்திய அணி வீரர்கள் பெரும்பாலோனோர் க்ரோலியை திட்ட ஆரம்பித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, 5ஆவது பந்து, தனது கை க்ளோஸில் பட்டதால், உடனே பிசியோவை வரவைத்து சிகிச்சை பெற்றார். இப்படி, நேரத்தை கடத்தியதால், இரண்டு ஓவர்கள் வீச வேண்டிய நேரத்தில், ஒரேயொரு ஓவரைதான் வாச முடிந்தது.
இது இந்திய அணி வீரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.