அறிவிக்கப்பட்டது இந்திய ஏ அணி.. சீனியர்களுக்கு இடமில்லை... தமிழக வீரருக்கு வாய்ப்பு... கேப்டன் யார் தெரியுமா?
முதல் டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
 
                                5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய ஏ அணி, இங்கிலாந்துக்கு சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
இதில் இந்திய அணியில் இளம் வீரர்கள் விளையாடும் நிலையில், சீனியர் வீரர்களுக்கு பயிற்சி வேண்டும் என்பதற்காக இந்திய ஏ அணியில் பல ஸ்டார் வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இந்திய ஏ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாகவும், தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் இடம் பிடித்துள்ளார். கருண் நாயர்க்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இசான் கிஷனும் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஆல்ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, சர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டதுடன், சிஎஸ்கே வீரர்களான அன்சூல் காம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் ஆகியிருக்கும் இந்திய ஏ அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்படுபவர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேவேளை, தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் நட்சத்திர வீரர் கில் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் தொடர் ஜூன் மூன்றாம் தேதி முடிவடைந்த பிறகு வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளனர். சீனியர் வீரர்களான கே ஆர் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஆகியோர் இந்த இந்திய ஏ தொடரில் சேர்க்கப்படவில்லை.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணி
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
கருண் நாயர்
துருவ் ஜூரல் (துணைக் கேப்டன்) 
நிதிஷ் குமார் ரெட்டி
ஷர்துல் தாக்கூர்
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
மனவ் சுதர்
தனுஷ் கோடியன்
முகேஷ் குமார்
ஆகாஷ் தீப்
ஹர்ஷித் ராணா
அன்ஷுல் கம்போஜ்
கலீல் அகமது
ருதுராஜ் கெய்க்வாட்
சர்பராஸ் கான்
துஷார் தேஷ்பாண்டே
ஹர்ஷ் துபே                             
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






