கம்பீர் காலத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு சரிவு: சொந்த மண்ணில் 6 போட்டிகளில் 4 தோல்வி – ரசிகர்கள் கடும் அதிருப்தி
இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின், சொந்த மண்ணில் ஆடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ந்து வரும் தோல்விகளால், “கம்பீர் தோல்விகளில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை” என்ற விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன.
இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின், சொந்த மண்ணில் ஆடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ந்து வரும் தோல்விகளால், “கம்பீர் தோல்விகளில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை” என்ற விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. வெற்றி பெற இந்திய அணிக்கு 124 ரன்கள் என்ற எளிய இலக்கு மட்டுமே இருந்தபோதும், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் அணி 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சுப்மன் கில் காயம் காரணமாக விலகியிருந்தாலும், இத்தகைய இலக்கை எட்ட முடியாதது அணியின் குறையான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் சொந்த மண்ணில் நடந்த முடிவுகள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் சரணடைந்தது.
பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற வெற்றி கிடைத்தாலும், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.
இத்தொடரும் தோல்விகள் கம்பீரின் அணித் தேர்வு முறையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறந்த ஃபார்மில் இருந்த சாய் சுதர்சன் பெஞ்சில் வைக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து தொடரில் போலவே, தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர்களுக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் சொந்த மண்ணில் கூட பிட்சைப் பயன்படுத்தும் தகுதி மற்றும் யோசனை குறைவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஸ்பின்னர்களுக்கு சாதகமாக பிட்சை மாற்ற வேண்டும் என்பதற்கான கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
