பாபர் அசாமை ரொம்ப ஈஸியா சமாளிக்கலாம்... ரோகித் சர்மாவின் மாஸ் திட்டம்!
ஆனால் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளதால், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாமை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 2 போட்டிகளில் விளையாடி அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஆனால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் இதுவரை ஃபார்முக்கு வரவில்லை. இரு உலகக்கோப்பை போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஆனால் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளதால், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாமை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.
ஏனென்றால் 2021 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமால் என்ன செய்ய முடிந்தது என்பது அனைவருக்கும் தெரியும். வேகப்பந்துவீச்சாளர்களை அபாரமாக எதிர்கொண்டு வரும் பாபர் அசாம், கடந்த சில போட்டிகளில் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி வருகிறார்.
திடீர்னு வெளியேறிட்டாரு.. வில்லியம்சனுக்கு என்ன பிரச்சனை? ரசிகர்கள் சோகம்!
இதற்கு அந்த அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இல்லாததும் முக்கியக் காரணம். அந்த வகையில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவை வைத்து பாபர் அசாமை வீழ்த்த ரோகித் சர்மா திட்டம் வைத்திருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலேயே ஸ்டீவ் ஸ்மித் வந்த பின் உடனடியாக ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
அதுபோல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு எதிராக இந்திய அணியின் குல்தீப் யாதவ் இதுவரை 18 பந்துகளை வீசி இருக்கிறார். அந்த 18 பந்துகளிலேயே குல்தீப் யாதவ் 2 முறை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். அதிலும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வீசிய பந்தை இன்றும் மறக்க முடியாது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் களமிறங்கினால் குல்தீப் யாதவ் அட்டாக்கில் கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |