திடீர்னு வெளியேறிட்டாரு.. வில்லியம்சனுக்கு என்ன பிரச்சனை? ரசிகர்கள் சோகம்!

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய வில்லியம்சன் 81 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார்.

திடீர்னு வெளியேறிட்டாரு.. வில்லியம்சனுக்கு என்ன பிரச்சனை? ரசிகர்கள் சோகம்!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கான்வே - கேன் வில்லியம்சன் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. 

குறிப்பாக கேன் வில்லியம்சன் 17வது பந்தில் தான் தனது 2வது ரன்னையே சேர்த்தார். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய வில்லியம்சன் 81 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார்.

இதனிடையே கான்வே 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, டேரில் மிட்செல் களமிறங்கிய அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினார். 

இதனால் நியூசிலாந்து அணி 37 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை சேர்த்திருந்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேன் வில்லியம்சன் 105 பந்துகளில் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

அப்போது 38வது ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் விரைவாக ஒரு ரன் எடுக்க ஓட முயற்சிக்கும் போது வங்கதேச ஃபீல்டர், பந்தை ஸ்டம்பை பார்த்து எறிந்தார். 

அந்த பந்தை கேன் வில்லியம்சனின் இடது கையில் அடிக்க, அங்கேயே பேட்டை கீழே போட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடினார். பின்னர் ஒரு ஓவர் மட்டும் தாக்கு பிடித்த வில்லியம்சன், 78 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார்.

இதுகுறித்து நியூசிலாந்து அணி ட்விட்டர் பக்கத்தில், கேன் வில்லியம்சனுக்கு இடது கையில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்யப்படும். தற்போது முன்னெச்சரிக்கை காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கிய வில்லியம்சன், முதல் போட்டியிலேயே காயமடைந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...