ரோஹித் நெருக்கடி... அவசரப்பட்டு ஆட்டமிழந்த ஜெய்ஷ்வால்... காலியான ஷுப்மன் கில்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ரோஹித் நெருக்கடி... அவசரப்பட்டு ஆட்டமிழந்த ஜெய்ஷ்வால்... காலியான ஷுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி விளையாடி வருகின்றது. இந்தப் போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பௌலிங் பிட்சில் புட்கள் அதிகம் இருந்ததால், துவக்கத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. பவுன்ஸ், ஸ்விங் எதுவும் தென்படவில்லை.

இதயும் படிங்க: தோனி, சச்சின் சாதனையை தகர்த்து... கேப்டனாக வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

பந்துகள் லட்டுபோல் பேட்டிங்கிற்கு வந்தபோதும், ரோஹித் சர்மா அதனை சரியாக எதிர்கொள்ளவில்லை. அதிகமுறை எட்ஜ்தான் ஆனது. 

புல்லர் லெந்தில் வந்த இரண்டு பந்துகளைதான், ஸ்ட்ரைட் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார். மற்றபடி, அவர் பதற்றத்துடன் ஆடியதால், ஜெய்ஷ்வால் அட்டாக் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதல் இரண்டு போட்டிகளில், ஜெய்ஷ்வால் 321 ரன்களை குவித்த நிலையில், தற்போது, மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 10 (10) ரன்களைதான் அடுத்துள்ளார். அடுத்து, ஷுப்மன் கில்லும் 0 (9) டக்அவுட் ஆனார். இருவரையும் மார்க் உட் தான் வீழ்த்தினார்.

தற்போது இந்திய அணி 88 ஓவர்கள் விளையாடி 326 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து நல்ல நிலையில் விளையாடி வருகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...