சுயநலம்.. டீமுக்கு உலை வைக்கப் பார்த்த கோலி.. கொந்தளித்த ரசிகர்கள்
உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அதிக ஓவர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அணியின் நெட் ரன் ரேட் உயரும். அது அரை இறுதி வாய்ப்பு சிக்கல் ஆனால் அப்போது அணிக்கு உதவும்.
உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அதிக ஓவர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அணியின் நெட் ரன் ரேட் உயரும். அது அரை இறுதி வாய்ப்பு சிக்கல் ஆனால் அப்போது அணிக்கு உதவும்.
ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத விராட் கோலி தான் சதம் அடிப்பதிலேயே குறியாக இருந்தார். இந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 256 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 48, சுப்மன் கில் 53, ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்தனர். அடுத்து விராட் கோலி, கே எல் ராகுல் ஜோடி சேர்ந்து வெற்றிக்கு அருகே அணியை எடுத்துச் செல்ல முயன்றனர்.
37 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் சேர்த்து இருந்தது. அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
அப்போது விராட் கோலி 70 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்த நிலையில் தான் கோலி சதம் அடிக்க முடிவு செய்தார்.
ராகுலும் அதற்கு ஒப்புக் கொண்டு அதன் பின் கோலி மட்டுமே ரன் அடிக்கும் வகையில் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க ஆரம்பித்தார். 38 வது ஓவரில் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
மெஹிதி ஹசன் வீசிய அந்த ஓவரில் இருவரும் ஆறு பந்துகளில் ஆறு சிங்கிள் ஓடி 6 ரன்கள் சேர்த்தனர். கோலியால் திட்டமிட்டபடி பவுண்டரி அடிக்க முடியவில்லை.
அடுத்து 39வது ஓவரில் ராகுல் 2வது பந்தில் கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்த கோலி, ஐந்தாவது பந்தில் சிக்ஸ் அடித்தார்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் ஓடி மீண்டும் அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக்கை தானே வைத்துக் கொண்டார்.
40வது ஓவரிலும் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்த கோலி, கடைசி ஓவரில் 1 ரன் ஓடி அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக்கை தானே எடுத்துக் கொண்டார். இந்த ஓவரில் மூன்று பந்துகளில் சிங்கிள் ரன் ஓடும் வாய்ப்பை தவிர்த்தார்.
அடுத்து 41வது ஓவரிலும் இரண்டு, இரண்டு ரன் ஓடும் வாய்ப்பில் மட்டுமே ரன் எடுத்த கோலி மூன்று சிங்கிள் ரன் எடுக்கும் வாய்ப்புகளில் ரன் ஓடவில்லை.
42வது ஓவரில் வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில், தன் சதத்தை அடிக்க 3 ரன் தேவை என்பதால் பவுண்டரி அடிக்க முயற்சி செய்தார். முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி அடிக்க முடியாமல் மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்து தன் சதத்தை பூர்த்தி செய்தார். அதே பந்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
சுமார் 4 ஓவர்களை தான் சதம் அடிப்பதற்காக சுயநலமாக எடுத்துக் கொண்டார் விராட் கோலி. இந்த ஓவர்களில் ராகுல் கூட அதிரடி ஆட்டம் ஆடி இன்னும் ஒரு ஓவருக்கு முன்னதாகக் கூட போட்டியை முடித்து இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் இந்திய அணிக்கு கூடுதல் நெட் ரன் ரேட் கிடைத்து இருக்கும்.
ஆனால், கே எல் ராகுலுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, சுயநல ஆட்டம் ஆடிய விராட் கோலி சதம் அடித்தார். போட்டி முடிந்த உடன் பேசும் போது கூட இதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல், தான் உலகக்கோப்பையில் அதிக சதம் அடிக்கவில்லை. அதனால், இன்று அடித்தே ஆக வேண்டும் என நின்று ஆடினேன் என கூறி இருக்கிறார்.
நீண்ட நாட்களாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்பதோடு, சச்சினின் அதிக ஒருநாள் போட்டி சதம் அடித்த சாதனையை அவர் முறியடிக்க விரும்புவதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இந்த சதத்தை சுயநலம் என கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |