எந்த அணியாலும் செய்ய முடியாததை சாதித்து காட்டிய சன்ரைசர்ஸ் அணி

2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் வீழ்த்தி இருக்கிறது. 

எந்த அணியாலும் செய்ய முடியாததை சாதித்து காட்டிய சன்ரைசர்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்து காட்டி உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி  20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. சேஸிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் வீழ்த்தி இருக்கிறது. 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 முறை சேசஸிங் செய்து ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்திருக்கிறது.

கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் ரோமன் போவல் இருந்தார். கடைசி ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. 

கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலையில் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்து வீசி ரோமன் போவலை எல்பிடபுபிள்யூ செய்தார்.

2024 ஐபிஎல் தொடரில் நம்பர் ஒன் அணியாக வலம் வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...