2026 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் எத்தனை வீரர்கள் தேவை? அதிக பணம் வைத்திருப்பது யார்?

அணிகளின் கையில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், இன்று நடக்கும் ஏலம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம். 

2026 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் எத்தனை வீரர்கள் தேவை? அதிக பணம் வைத்திருப்பது யார்?

கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று (டிசம்பர் 16, செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெறவுள்ளது. 

அணிகளின் கையில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், இன்று நடக்கும் ஏலம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம். 

மொத்த 350 வீரர்கள் ஏல பட்டியலில் உள்ளனர். 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 77 இடங்களை நிரப்ப வேண்டும், இதில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் உள்ளன. 

அணிகளின் விரிவான தேவைகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 இடங்கள் (6 வெளிநாட்டு), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 இடங்கள் (2 வெளிநாட்டு), சென்னை சூப்பர் கிங்ஸ் 9 இடங்கள் (4 வெளிநாட்டு), ராஜஸ்தான் ராயல்ஸ் 9 இடங்கள் (1 வெளிநாட்டு), டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 இடங்கள் (5 வெளிநாட்டு), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 இடங்கள் (2 வெளிநாட்டு), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 இடங்கள் (4 வெளிநாட்டு), குஜராத் டைட்டன்ஸ் 5 இடங்கள் (4 வெளிநாட்டு), மும்பை இந்தியன்ஸ் 5 இடங்கள் (1 வெளிநாட்டு), பஞ்சாப் கிங்ஸ் 4 இடங்கள் (2 வெளிநாட்டு).

இந்த ஏலத்தில் கேமரூன் கிரீன், லியம் லிவிங்ஸ்டோன், வெங்கடேஷ் ஐயர் போன்ற முன்னணி வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய "அதிகபட்ச ஊதிய விதி"யின்படி, ஒரு வெளிநாட்டு வீரர் எவ்வளவு தொகைக்கு ஏலம் போனாலும் சம்பளம் குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே வழங்கப்படும். உதாரணமாக, கேமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு ஏலம் போனாலும், அவருக்கு சம்பளமாக ரூ.18 கோடி கிடைக்கும்; மீதமுள்ள தொகை அணியின் ஏலத்தொகையில் இருந்து கழிக்கப்படும்.

அதிக பணம் வைத்திருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அவர்களிடம் மொத்தம் ரூ.64.3 கோடி கையிருப்பு உள்ளது. இதனால் வெங்கடேஷ் ஐயர், லியம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்களுக்கு கொல்கத்தா அணியின் அதிக போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.