தூக்கிய எறியப்பட்ட ருதுராஜ்... பொறாமையால் பொங்கியகம்பீர்? ரசிகர்கள் ஷாக்!
அவருக்கு டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படாதமைக்கு கவுதம் கம்பீரின் பொறாமை தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் ருதுராஜ் கெய்க்வாட் புறக்கணிக்கப்பட்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் சிறப்பாக ஆடி இருந்த போதும், அவருக்கு டி20 அணியிலும் இடம் அளிக்கப்படாதது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்று உள்ள நிலையில் இலங்கை தொடருக்கான அணித் தேர்விலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில்லை கவுதம் கம்பீர் தேர்வு செய்து இருக்கிறார்.
எனினும், சுப்மன் கில்லை விட டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் தேர்வு செய்யவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட் தனது திறமைகளை பலமுறை நிரூபித்து இருக்கிறார். ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், டாப் ஆர்டரில் அவர்களின் இடத்தை நிரப்ப ருதுராஜ் கெய்க்வாட் சரியான வீரராக இருப்பார்.
ரோஹித் சர்மா, விராட் கோலியைப் போன்று மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் சிறப்பாக ஆடக்கூடிய பேட்டிங் திறன் ருதுராஜ்-இடம் உள்ளதாக பலரும் கூறி இருந்தனர்.
ஆனால், அவருக்கு டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படாதமைக்கு கவுதம் கம்பீரின் பொறாமை தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
கவுதம் கம்பீருக்கு எப்போதுமே தோனி மீது பொறாமை இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. உலகக் கோப்பை வெற்றிகளுக்கான பாராட்டு தோனிக்கு மட்டுமே செல்கிறது என கம்பீர் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்திருக்கிறார்.
அதே போல, ஐபிஎல் தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக இரண்டு கோப்பைகளை வென்ற போதும், தோனி சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்று இருக்கிறார்.
அதன் காரணமாகவே அவர் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணித்து இருக்கிறார் என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |