அந்த இடத்துல தான்  நாங்க தோற்று போனோம்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட காரணம்!

கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணிக்கு வந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்த இடத்துல தான்  நாங்க தோற்று போனோம்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட காரணம்!

நடப்பு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதுமே அனைவரது கவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி மீது இருந்தது.

கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணிக்கு வந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

அகமதாபாத் மைதானத்தில் கடந்த இரண்டு சீசன்கள் நிறைய போட்டிகளில் குஜராத் அணி வெல்லவும் முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, அதே மைதானத்தில் தற்போது குஜராத்தை எதிர்த்து மும்பை அணிக்காக ஆடுவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருந்தது.

எதிர்பார்த்ததை போலவே  ஹர்திக் பாண்டியா பேசிய சமயத்தில் மைதானத்தில் இருந்த பலரும் ரோஹித், ரோஹித் என கத்தி இருந்ததும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. 

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில் பும்ரா மற்றும் கோட்ஸி ஆகியோர் சேர்ந்து 8 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.

அதிலும் கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஆடாமல் இருந்தும் தான் இந்த முறை மீண்டும் கம்பேக் கொடுத்ததுடன் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார் பும்ரா. 

தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய மும்பை அணி முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்தது.

ரோஹித் ஷர்மா மற்றும் ப்ரேவிஸ் ஆகியோர் அவுட்டான சூழலில், மும்பை வீரர்கள் நிதானமாக ஆடத் தொடங்கினர். கடைசி ஐந்து ஓவர்களில் 42 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலை இருந்த போதும் குஜராத் அணி சிறப்பாக பந்து வீசி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

பழிக்கு பழி... மும்பை அணிக்கே ஆட்டம் காட்டிய கில்.. கடைசி ஓவரில் ஹர்திக்கால் நடந்த ட்விஸ்ட்...!

முதல் போட்டியில் அடைந்த தோல்வி பற்றி ஹர்திக் பாண்டியா பேசுகையில், “கடைசி ஐந்து ஓவர்களில் 42 ரன்களை எடுக்க முடியும் என்று தான் நினைத்தோம். ஆனால் குறைந்த பந்துகளில் குறைந்த ரன்களை தொட முடியாத ஒரு போட்டியாக இது அமைந்து விட்டது. 

அந்த நேரத்தில் கொஞ்சம் வேகத்தை நாங்கள் இழந்து விட்டோம் என நினைக்கிறேன். அகமதாபாத் மைதானத்தில் மீண்டும் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நீங்கள் மிகவும் ரசித்தபடி ஆடலாம். 

அதே போல ரஷீத் கான் ஓவரில் திலக் வர்மா சிங்கிள் ஓடாமல் இருந்தது தவறான விஷயமாக நான் பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அது சிறந்த ஐடியா என அவர் நினைத்திருக்கலாம். அது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை. இன்னும் 13 போட்டிகள் மீதம் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...