பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்.. கார் விபத்தில் படுகாயம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே, கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளார்.

Mar 14, 2024 - 23:22
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்.. கார் விபத்தில் படுகாயம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே, கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளார்.

2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான திரிமான இலங்கை அணியின் முக்கிய வீரராக இருந்தார்.

44 டெஸ்ட், 127 ஒருநாள் போட்டி, மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடிய அவர், இலங்கை அணிக்காக மூன்று டி20 உலக கோப்பைகளில் விளையாடி உள்ளார்.

மேலும், இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.  இலங்கை அணியை ஐந்து ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி இருக்கிறார். 

இந்த நிலையில் திரிமானே பயணித்த காரில்  லாரி ஒன்று நேரடியாக மோதி இருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த திரிமான, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காததால் கடந்த ஜூலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 

திரிமான உடல்நலம் பெற இலங்கை ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!