இளம் வீரருக்கு ஓராண்டு தடை?  ராகுல் டிராவிட் அந்தர் பல்டி... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இஷான் கிஷன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என அனைத்து வித அணிகளிலும் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தார். 

இளம் வீரருக்கு ஓராண்டு தடை?  ராகுல் டிராவிட் அந்தர் பல்டி... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இஷான் கிஷனை இந்திய அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்து இருப்பதாக செய்தி வெளியாகி வருகின்ற நிலையில், அது குறித்து ராகுல் டிராவிட் தான் முன்பு கூறிய கருத்தை தானே மறுத்து அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்.

இஷான் கிஷன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என அனைத்து வித அணிகளிலும் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தார். 

ஆனால், அவர் 15 வீரர்களில் ஒருவராக, மாற்று வீரராகவே தொடர்ந்து இடம் பெற்றார். யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே அவருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அவர் தனக்கு எந்த போட்டியிலும் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் விரக்தியில் இருந்தார். 

அப்போது டெஸ்ட் அணியிலும் தனக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை அறிந்த அவர் மனமுடைந்து இந்திய அணியை விட்டு சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

அது இந்திய அணி நிர்வாகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பின்னர் அவரை ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என எந்த அணியிலும் தேர்வு செய்யவில்லை. 

அப்போது அது குறித்து ராகுல் டிராவிட்-இடம் செய்தியாளர்கள் கேட்ட போது இஷான் கிஷன் உள்ளூர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று தான் தேர்வு செய்யப்பட தயார் என்பதை அறிவித்தால் அவரை நாங்கள் அணியில் தேர்வு செய்வோம் என்றார். 

இந்த நிலையில், இஷான் கிஷனை அடுத்த ஓராண்டுக்கு இந்திய அணியில் தேர்வு செய்யக் கூடாது என பிசிசிஐ தரப்பில் ரகசிய தடை விதித்து இருப்பதாக ஒரு தகவல் பரவியது.

இது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அளித்த பேட்டியில் தான் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என கூறவில்லை என பல்டி அடித்து இருக்கிறார். 

இது பற்றி டிராவிட் பேசுகையில், "நாங்கள் யாரையும் எதில் இருந்தும் ஒதுக்கி வைக்கவில்லை. எல்லோருக்கும் அணியில் இடம் பெற வழி உண்டு. நான் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என கூறவில்லை. 

அவர் கொஞ்சம் கிரிக்கெட் ஆடிவிட்டு, அணிக்கு திரும்ப வேண்டும் என்று தான் கூறினேன். முடிவு அவருடையது தான். நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர் இன்னும் போட்டிகளில் ஆட ஆரம்பிக்கவில்லை இல்லையா? எப்போது தயாராக இருக்கிறோம் என்பதை அவரே முடிவு செய்வார்" என்றார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...