அந்த வீரரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும்; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இர்பான் பதான்!
ஷர்சல் பட்டேல் போன்ற வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயமாக ஏலத்தில் எடுக்கும் என இர்பான் பதான் கூறியுள்ளார்
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும் என முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மினி ஏலத்தில் யார் யாரை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்கள் இடையே அதிகமாக நிலவி வரும் நிலையில், ஷர்சல் பட்டேல் போன்ற வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயமாக ஏலத்தில் எடுக்கும் என இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து இர்பான் பதான் பேசுகையில், “தற்போதைய சென்னை அணியில் இருக்கும் அதிகமான வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகமாக நம்பி இருக்கும் தீபக் சாஹர், அடிக்கடி காயமடைவதால் சென்னை அணி பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சென்னை அணியின் தற்போதைய தேவை ஷர்சல் பட்டேல் போன்ற ஒரு பந்துவீச்சாளர் தான். ஹர்சல் பட்டேலை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாகவே நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |