இரண்டு போட்டிகளின் அட்டவணையில் திடீர் மாற்றம்., காரணம் என்ன?
ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளின் அட்டவணையில் நிர்வாகம் மாற்றங்களை செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளின் அட்டவணையில் நிர்வாகம் மாற்றங்களை செய்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 17ஆம் திகதி நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
போட்டி ஒரு நாள் முன்னதாக அதாவது ஏப்ரல் 16-ஆம் திகதி நடைபெறும்.
கேகேஆர், ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மாற்றப்பட்டதால், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் மாற்றப்பட்டது.
குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 17-ஆம் திகதி நடக்கிறது.
இந்தியா முழுவதும் ராமநவமி கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடைபெறும் நிலையில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஐபிஎல் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |