மெக்சிகோவில் காவல் நிலையத்துக்கு வெளியே கார் குண்டு வெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு, 6 பேர் காயம்
“காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பேர் பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்” என அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மெக்சிகோவின் மேற்கு மாநிலமான மிக்கோவாகன் (Michoacán) பகுதியில் உள்ள கோஹுயானா (Cohuayana) என்ற இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே கார் குண்டு வெடிப்பு ஒன்று நடந்துள்ளது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த குண்டு வெடிப்பு கோஹுயானாவில் உள்ள ஒரு சாலையில் நடந்துள்ளது.
“காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பேர் பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்” என அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கோஹுயானா சமூக காவல்துறையின் தலைவர் ஹெக்டர் செபெடா (Héctor Zebeda) கூறுகையில், மருத்துவமனையில் உயிரிழந்த இருவரும் சமூக காவல்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல், மிக்கோவாகன் மாநிலத்தில் நீடிக்கும் குற்றவாளிகள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான மோதல்களின் பின்னணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
