சச்சினின் சாதனையை உடைக்க போகும் மருமகன் வீரர்.... கில்லின் வேற லெவல் சாதனை!

இருவருமே டேட்டிங் செய்ததாக ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளதுடன், சச்சினை மாமனார் என்றும் கில்லை மருமகன் என்றும் அழைத்து வருகின்றனர்.

சச்சினின் சாதனையை உடைக்க போகும் மருமகன் வீரர்.... கில்லின் வேற லெவல் சாதனை!

சச்சின் டென்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை அடுத்த விராட் கோலி என ரசிகர்களால் போற்றப்படும் சுப்மன் கில் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து இருவருமே அதிகாரப்பூர்வமாக இதுவரை சொல்லவில்லை.

எனினும் இருவருமே டேட்டிங் செய்ததாக ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளதுடன், சச்சினை மாமனார் என்றும் கில்லை மருமகன் என்றும் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சச்சின் மாபெரும் சாதனை ஒன்றை கில் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் பவுண்டரிகளில் மட்டும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். 

 1998 ஆம் ஆண்டு சச்சின் நான்கு மற்றும் ஆறு ரன்கள் அடித்து மொத்தமாக 992 ரன்களை பவுண்டரிகளாக சேர்த்து இருக்கிறார். தற்போது 2023 ஆம் ஆண்டு பவுண்டரிகளாக (4+6) அடித்து 966 குவித்திருக்கிறார். 

இந்த நிலையில், சச்சின் சாதனையை முறியடிக்க அவர் பௌண்டரி அல்லது சிக்ஸராக 26 ரன்கள் சேர்க்க வேண்டும். இந்த நிலையில், கில் விளையாட இன்னும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதனால் அந்த 26 ரன்களை பௌண்டரிகளாக மூன்று போட்டிகளில் அடிக்க கில்லுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனை கில் செய்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் பவுண்டரிகளாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். அதுமட்டுமின்றி கில்லுக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். 

அவர் நடப்பாண்டில் பவுண்டரிகளாக 926 ரன்கள் சேர்த்து இருந்தாலும், ஒரு நாள் தொடரில் இல்லாத நிலையில், அவரால் சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க முடியாது.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கங்குலி இருக்கிறார். அவர் 1999 ஆம் ஆண்டு 888 ரன்கள் பவுண்டரிகளாக அடித்திருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...