கனடாவில் தந்தையை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட மகன் தலைமறைவு

குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் இந்த சம்பவத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

கனடாவில் தந்தையை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட மகன் தலைமறைவு

கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் தந்தையை துப்பாக்கியால் தாக்கி உயிரிழப்புக்குள்ளாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், காசவல்துறை அவரைத் தேடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் தனது 25 வயது மகனால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் இந்த சம்பவத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சுமத்தப்பட்ட மகன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மாகாண அளவிலான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.