ஒதுக்கி வைக்கப்பட்ட இளம் வீரர்... ஒதுக்கி வைக்கிறதாக பிசிசிஐ? உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றவருக்கு ஏற்பட்ட நிலை!
டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த யுஸ்வேந்திர சாஹலுகு்கு ஒரு போட்டியில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
                                டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த யுஸ்வேந்திர சாஹலுகு்கு ஒரு போட்டியில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவருக்கு ஓராண்டு காலமாக இந்திய டெஸ்ட் அணி, ஒரு நாள் அணி, டி20 அணி என எதிலும் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது.
எனினும், டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காதது மட்டும் இல்லாமல் அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
சஞ்சு சாம்சன், உலகக் கோப்பையில் ஒரு போட்டியிலும் ஆடாத நிலையில், அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல, மாற்று வீரர்களாக இந்திய அணியுடன் பயணம் செய்த சுப்மன் கில், ஆவேஷ் கான், கலீல் அஹமத், ரிங்கு சிங் ஆகிய நால்வருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சாஹலுக்கு மட்டுமே அந்த அணியில் இடம் அளிக்கப்படவில்லை. ஓராண்டு காலம் அவரை எந்த அணியிலும் தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்திருந்தது போல தற்போது மீண்டும் பிசிசிஐ அவரை ஒதுக்கி வைக்கத் துவங்கி விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னதாக, இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் சாஹல் அணியில் இருப்பதை விரும்பாததால் தான் அவர் நீக்கப்பட்டார் என்ற ஒரு வதந்தி வலம் வந்தது. அவர் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றதால்,தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற எண்ணம் காணப்பட்டது.
ஆனால், உலகக் கோப்பை முடிந்த உடனே மீண்டும் இந்திய அணியில் இடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






