ஐபிஎல்-இல் இருந்து விராட் கோலி விலகுவாரா? அதற்கும் வாய்ப்பு இருக்கா... இதோ காரணங்கள்!

இந்த நிலையில் விராட் கோலியின் நடவடிக்கைகள் குறித்து  கிரிக்கெட் வல்லுனர்கள் சில கேள்விக்ளை முன்வைத்து இருக்கின்றனர்.

ஐபிஎல்-இல் இருந்து விராட் கோலி விலகுவாரா? அதற்கும் வாய்ப்பு இருக்கா... இதோ காரணங்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி பாதியிலிருந்து விலகியது தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.

விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிசிசிஐயும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் விராட் கோலியின் நடவடிக்கைகள் குறித்து  கிரிக்கெட் வல்லுனர்கள் சில கேள்விக்ளை முன்வைத்து இருக்கின்றனர்.

அதாவது, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் வீரர் என்று ரசிகர்களால் அறியப்படுபவர். ஆனால் அவரே டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணத்தைக் காட்டி விலகி இருக்கிறார்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த கோலி.. டெஸ்ட் அணியில் இருந்தே விலகல்?... அதிர்ச்சியில் பிசிசிஐ!

இதே விராட் கோலி ஐபிஎல் போட்டியில் ஏதேனும் காரணத்தை சொல்லி இதுவரை விலகி இருக்காரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக விளையாடும்போது விராட் கோலி இவ்வாறு பாதியில் செல்வாரா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

அத்துடன், ஐபிஎல் தொடரில் பணம் கிடைக்கிறது என்றும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது அவ்வாறு ஏதும் கிடைக்கவில்லை என்று தான் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

விராட் கோலி போன்ற வீரர்களே இவ்வாறு தவறான முன்னுதாரணத்தை இளம் வீரர்களுக்கு காட்டினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கேள்வி எழுப்பு உள்ளனர்.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி இதிலிருந்து விலகி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடும் வீரர்களுக்கு அதிக சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...