பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்
இந்த துயர சம்பவம் பகிடிவதை கொலையுடன் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 23 வயது சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தால் தங்கள் கூட்டமைப்பு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் பகிடிவதை கொலையுடன் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரும், மூத்த விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க கூறியுள்ளார்.