எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் ஆடிய ஹெட்... தடுக்க முடியவில்லை – பாராட்டிய ஸ்டோக்ஸ்
ஆஷஸ் 2025 டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 205 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி எளிதாக தாண்டி வெற்றியைப் பதிவு செய்தது.
பெர்த்: ஆஷஸ் 2025 டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 205 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி எளிதாக தாண்டி வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் வெறும் 69 பந்துகளில் சதம் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.
இந்த வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என முன்னிலை வகிக்கிறது. தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஹெட்டின் ஆட்டத்தைப் பற்றி மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
“ஹெட் விளையாடியது உண்மையிலேயே பிரமாதமான இன்னிங்ஸ். அவர் முழு தைரியத்துடன் விளையாடி போட்டியின் ஓட்டத்தை முழுவதும் எங்கள் கைகளிலிருந்து எடுத்துக்கொண்டார். நாங்கள் பல திட்டங்களை முயற்சி செய்தோம். ஆனால் அவர் எங்களை ஒரு ‘எக்ஸ்பிரஸ் ரயில்’ போல கடந்து சென்றார்,” என ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
மேலும் அவர், “நாங்கள் முதல் நாளில் சிறப்பாக பந்து வீசியிருந்தோம். போட்டி முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் விளைவு நம்மை ஏமாற்றியது. இன்னும் நான்கு போட்டிகள் இருக்கும் நிலையில், மீண்டும் திரும்பி வெற்றிக்கான திட்டத்தை அமைப்போம்,” என்றார்.
இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 4 அன்று பிரிஸ்பேனில் பகல்–இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
