போட்டி டை ஆக இதுதான் காரணமே.. ரோஹித் சர்மா செய்த தவறு.. விளாசும் ரசிகர்கள்!

இந்திய அணி 230 ரன்கள் எடுத்த நிலையில் அவர் 47.4 வது ஓவரில் ஆட்டம் இழப்பார் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை. 

Aug 3, 2024 - 11:50
Aug 3, 2024 - 11:51
போட்டி டை ஆக இதுதான் காரணமே.. ரோஹித் சர்மா செய்த தவறு.. விளாசும் ரசிகர்கள்!

இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்க வேண்டிய போட்டியில் இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்து டை செய்தது. 

பந்து வீச்சின் போதே இந்திய அணி சில மோசமான செயல்பாடுகளை செய்ததுடன், கேப்டன் ரோகித் சர்மா எடுத்த பல முடிவுகள் தவறாக சென்றன. 

அதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ஒரு காரணமாக இருந்த நிலையில்,  ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும், கேப்டன் ரோகித் சர்மாவையும் விளாசி வருகின்றனர்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 101 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து இருந்த நிலையில், பின்வரிசை வீரர் துனித் வெல்லாலகே அபாரமாக ஆடி 65 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். 

இதை அடுத்து இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்ததுடன், கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியால் இலங்கை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோகித் சர்மா இடையே சுப்மன் கில்லுக்கு ஒரு ஓவர் அளித்த நிலையில், அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. 

மற்ற முக்கிய இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அந்த ஓவரை கொடுத்திருந்தால் அவர்கள் கட்டுக்கோப்பாக வீசி இலங்கை மீதான அழுத்தத்தை தக்க வைத்து இருப்பார்கள். 
சம்பந்தமே இல்லாமல் பகுதி நேர பந்துவீச்சாளரான சுப்மன் கில்லுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு அளித்த நிலையில், இலங்கை 230 ரன்கள் எடுத்தது.

231 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி சேசிங் செய்த நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இருந்ததால் இந்திய அணி மிக எளிதாக இந்த இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். 

ஆனால், ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 35 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற நான்காம் வரிசையில் கே எல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி இருக்க வேண்டும் என்ற நிலையில்,  வாஷிங்டன் சுந்தரை அனுப்பினார் கேப்டன் ரோகித் சர்மா. 

அது தவறான முடிவாக அமைந்ததுடன், அவர் நான்கு பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணி 87 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 

வாஷிங்டன் சுந்தருடையது முக்கிய விக்கெட் இல்லை என்றாலும் விக்கெட் வீழ்ச்சி என்பது மனதளவில் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை அளித்ததுடன்,  விராட் கோலி 24 ரன்களில் விக்கெட்டை இழந்து சென்றார். 

ஸ்ரேயாஸ் ஐயர் 23, ராகுல் 31, அக்சர் பட்டேல் 33 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். அதன் பின் சிவம் துபே எட்டாம் வரிசையில் களம் இறங்கினார். அவர் பின்வரிசை வீரர்களுடன் சேர்ந்து விரைவாக 24 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

21 வயது இளம் வீரரை வைத்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. மாறிய ஆட்டம்!

இந்திய அணி 230 ரன்கள் எடுத்த நிலையில் அவர் 47.4 வது ஓவரில் ஆட்டம் இழப்பார் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை. 

கடைசி விக்கெட்டுக்கு அர்ஷ்தீப் சிங் களத்துக்கு வந்ததுடன், அவர் டக் அவுட் ஆனார். இதை அடுத்து இந்திய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் மூலம் போட்டியும் டை ஆனது.

கேப்டன் ரோகித் சர்மா சுப்மன் கில்லுக்கு கொடுத்த அந்த ஒரு ஓவரும், பேட்டிங் வரிசையில் வாஷிங்டன் சுந்தரை நான்காம் வரிசையில் ஆட வைத்ததும் மிகப்பெரிய தவறாக அமைந்தது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!