21 வயது இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை.. கோலி - அகர்கர் கையில்.. என்ன நடக்க போகிறது?

கேப்டனான ரோகித் சர்மா துவக்க வீரராகவும் வருவது 99 சதவீதம் முடிவாகியுள்ளதுடன், இன்னொரு இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவது உறுதியாகி உள்ளது.

Dec 19, 2023 - 12:42
21 வயது இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை.. கோலி - அகர்கர் கையில்.. என்ன நடக்க போகிறது?

ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் நீக்கிய அடுத்த நாளில், நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மாவை கேப்டன் என பிசிசிஐ அறிவித்தது.

இந்த நிலையில், கேப்டனான ரோகித் சர்மா துவக்க வீரராகவும் வருவது 99 சதவீதம் முடிவாகியுள்ளதுடன், இன்னொரு இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவது உறுதியாகி உள்ளது. ஆனால், இந்திய நட்சத்திர மூத்த பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி  டி20 உலகக்கோப்பை குறித்து என்ன முடிவு எடுக்கிறார் என்று இதுவரை தெரிய வரவில்லை.

அதுமட்டுமின்றி, விராட் கோலி டி20 உலக கோப்பையில் விளையாடுவது குறித்துஅஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு,  என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

டி20 உலககோப்பை... பிசிசிஐ போட்ட ஸ்கெட்ச்... ருதுராஜ் மற்றும் கில் மோதல்!

அடுத்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடினால், இளம் வீரர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இருவருக்கு மட்டுமே அணியில் இடம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன், இளம் வீரர்களான ருதுராஜ், சுப்மன் கில், திலக் வர்மா ஆகியோர் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதுடன், ருத்ராஜ் மற்றும் சுப்மன் கில் இருவரது இடமும் ரோகித் சர்மாவின் வருகையை பொறுத்துதான உள்ளது.

இதேவேளை, 21 வயதான திலக் வர்மாவின் இடம் என்பது விராட் கோலியின் வருகையை பொறுத்து இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!