அடித்த அடியில் துடுப்பாட்ட மட்டைக்கு நேர்ந்த கதி... கிறிஸ் கெயில் மரண அடி... மிரண்டு போய் நின்ற ரசிகர்கள்!

கிரிக்கெட் போட்டிகளின் இடையே பேட் உடைந்த சம்பவங்கள் நிறைய இருந்தாலும், கிறிஸ் கெயிலின் பேட் உடைந்து தொங்கியது இதுவே முதல் முறையாகும்.

அடித்த அடியில் துடுப்பாட்ட மட்டைக்கு நேர்ந்த கதி... கிறிஸ் கெயில் மரண அடி... மிரண்டு போய் நின்ற ரசிகர்கள்!

கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயில், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் பங்கேற்ற  போட்டியில் அடித்த ஒரு ஷாட்டில் அவரது பேட் உடைந்து தொங்கியதை கண்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

கிரிக்கெட் போட்டிகளின் இடையே பேட் உடைந்த சம்பவங்கள் நிறைய இருந்தாலும், கிறிஸ் கெயிலின் பேட் உடைந்து தொங்கியது இதுவே முதல் முறையாகும்.

ராஞ்சியில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பில்வாரா கிங்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே நடந்த டி20 போட்டியில் கிறிஸ் கெயிலின் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கிறிஸ் கெயில் வழக்கம் போல ஆரம்ப வீரராக களமிறங்க அவருடன் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக்கஸ் காலிஸ் ஆடினார். கெயில் செய்த சொதப்பலால் காலிஸ் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன் பின் தன் அதிரடி வேகத்தை கூட்டிய கிறிஸ் கெயில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவர் 38 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆறாவது ஓவரை சந்தித்த போது தான் பேட் உடைந்த சம்பவம் நடந்தது. 

இங்கிலாந்து வீரர் ரியான் சைடுபாட்டம் வீசிய அந்த ஓவரில் கிறிஸ் கெயில் நான்காவது பந்தை ஃபோர் அடிக்க முயன்றார். அப்போது பந்தை அவர் அடித்த போது பேட் கைப்பிடி உடைந்தது. 

ஆனாலும், அந்தப் பகுதியில் பேட் ஒட்டப்பட்டு இருக்கும் என்பதால் முழுமையாக உடையாமல் பேட் கீழே தொங்கியது. ஒரு நொடியில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு மைதானத்தில் நேரில் போட்டியை கண்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

இந்தப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெயில் அடித்த 52 ரன்களே அந்த அணியில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். 

இந்த தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பார்த்திவ் பட்டேல் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணியின் கேப்டனாக இர்பான் பதான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...