சுஷாந்த் சிங் மரண வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்; நடிகை ரியா குறித்து அதிரடி அறிவிப்பு

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

Mar 24, 2025 - 13:13
Mar 24, 2025 - 13:15
சுஷாந்த் சிங் மரண வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்; நடிகை ரியா குறித்து அதிரடி அறிவிப்பு

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் சிபிஐ அறிவித்துள்ளது.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

இதுகுறித்து விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, சுஷாந்த் சிங் காதலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சவுபிக் சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாம்யூல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கின் இறுதி அறிக்கையை மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்தின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் சுஷாந்தின் குடும்பத்தினர் மீது ரியா சக்ரபோர்த்திய கூறிய குற்றச்சாட்டுகள் ஆகிய இரண்டு வழக்குகளிலும், இருதரப்பிலும் வழக்கை முடித்து வைக்கும்படி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. 

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!