ஆசிய கோப்பை வங்கதேசத்தை வீழ்த்தி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில், இலங்கையும் வங்கதேசமும் மோதின. இலங்கை அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில், இலங்கையும் வங்கதேசமும் மோதின. இலங்கை அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். லிட்டன் தாஸ் 28 ரன்களிலும், தவ்ஹீத் ஹிர்தாய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மெஹதி ஹசன் ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 53 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், ஜேக்கர் அலி 34 பந்துகளில் 41 ரன்களும், மற்றொரு வீரர் 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து அணியை கௌரவமான இலக்கை எட்ட உதவினர்.
இதன் காரணமாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக விளையாடிய நிஷாங்கா 34 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் மூன்று ரன்களில் ஆட்டமிழந்தார்.
தசன் சனாகா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இளம் வீரர் காமில் மிஸ்ரா மட்டும் 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். கேப்டன் ஷனக்கா நான்கு பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 14.4 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியின் ரன் ரேட் 2.59 என்ற அளவில் இருக்கிறது. முதலிடத்தில் இரண்டு புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 4.70 என்ற அளவில் இருக்கின்றது.
