மழையால் வந்த ஆப்பு... கைமீறிப் போன வாய்ப்பு... இலங்கை அணியின் கனவு கலைந்தது!

மழையால் ஒட்டுமொத்த மைதானமும் குளம் போல காட்சியளித்ததுடன், அந்த பகுதியில் வெள்ள பாதிப்புக்கான எச்சரிக்கையும் விடப்பட்டது. 

மழையால் வந்த ஆப்பு... கைமீறிப் போன வாய்ப்பு... இலங்கை அணியின் கனவு கலைந்தது!

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது.

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வி அடைந்த இலங்கை அணி மற்றும் நேபாள அணியுடன் மோத இருந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 

மழையால் ஒட்டுமொத்த மைதானமும் குளம் போல காட்சியளித்ததுடன், அந்த பகுதியில் வெள்ள பாதிப்புக்கான எச்சரிக்கையும் விடப்பட்டது. 

மழை விடாமல் பெய்ததால் அம்பயர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்ததுடன், இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

நேபாள அணி  இரண்டு போட்டிகளில் பங்கேற்று ஒரு புள்ளி மட்டும் பெற்று நான்காவது இடத்தில் உள்ளதுடன்,  இலங்கை அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு புள்ளி மட்டும் பெற்று மோசமான நெட் ரன் ரேட் (-0.777) உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது.

இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் குரூப் டி பிரிவில் நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் மோதும் போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும். 

அத்துடன், இலங்கை அணி தனது கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியை மிகப்பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். 

இது இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இலங்கை அணியின் சூப்பர் 8 கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...