ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்ன? கம்பீர் வைத்த ஆப்பு!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்ன? கம்பீர் வைத்த ஆப்பு!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து வந்த ரோஹித் சர்மா, திடீர்  என ஓய்வு அறிவிப்பை வெளியிட்டமை ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி 2022ஆம் ஆண்டு விலகிய பின், ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு போதுமான அனுபவம் கூட இருக்கவில்லை. 

 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடினார். அதற்கு முன்பாக ரோஹித் சர்மாவை எப்படியாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும் என்று விராட் கோலி எவ்வளவோ வாய்ப்புகளை அளித்தார். 

ஆனாலும் ரோஹித் சர்மா அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவில்லை. ரோஹித் சர்மா ஓவல் மைதானத்தில் தொடக்க வீரராக களமிறங்கி சதம் விளாசி இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை கொடுதார்.

அதன்பின் ரோஹித் சர்மா உள்நாட்டில் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான இன்னிங்ஸை ஆடி இருக்கிறார்.  2012ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. 

அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் ரோஹித் சர்மாவின் வரவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் கம்பீரின் அதிருப்தி காரணமாக வேறு வழியின்றி கடைசி டெஸ்ட் தொடரில் இருந்து தாமாக விலகி கொண்டார். 

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை புதிய கேப்டனுடன் தொடங்க பிசிசிஐ விரும்பிய நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாட ரோஹித் சர்மாவும் விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுடன், ரோஹித் சர்மாவுக்கு 38 வயதாகிவிட்டதால், கேப்டன்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக கம்பீர், அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்ததாகவும், அப்போது இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். 

இதனால் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா, திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.