களத்துக்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்த ரசிகர்.... மைதானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

இந்திய அணி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடித்து காலில் விழுந்தார்.

Jan 16, 2024 - 12:26
களத்துக்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்த ரசிகர்.... மைதானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

14 மாதத்திற்கு பிறகு இந்திய டி20 அணியில் விராட் கோலி இணைந்ததுடன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களம் இறங்கினார்.

விராட் கோலி விளையாடுவதால் இந்தூரில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். விராட் கோலி தொடக்க வீரராக இல்லாமல் மூன்றாவது வீரராக களம் இறங்கி பதினாறு பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் உட்பட 29 ரன்களை சேர்த்தார்.

விராட் கோலியின் அபார ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல கொண்டாட்டத்தை கொடுத்த நிலையில் இந்திய அணி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடித்து காலில் விழுந்தார்.

இதனை அடுத்து மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை தூக்கி இழுத்துச் சென்றனர்.அப்போது விராட் கோலி அந்த ரசிகர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறினார். 

போலீசாரின்  விசாரணையில் அவர் கோலியின் மிக தீவிர ரசிகர் என்றும் கோலியை கட்டி பிடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

கோலியை கட்டிப்பிடித்து ரசிகர் மைதானத்திற்குள் புகுந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகிய வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!