சூர்யகுமார் யாதவின் பலவீனம் இதுதான்.. சுட்டிக்காட்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

ஆண்கள் ஆசியக் கோப்பை T20 போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் வலிமையான அணியாக கருதப்படுகிறது. 

சூர்யகுமார் யாதவின் பலவீனம் இதுதான்.. சுட்டிக்காட்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

ஆண்கள் ஆசியக் கோப்பை T20 போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் வலிமையான அணியாக கருதப்படுகிறது. 

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், சற்று மோசமான நிலையில் உள்ளது. 

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் கான், இந்திய அணிக்கு ஒரு சவால் இருப்பதாக எச்சரித்துள்ளார். 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஆட்டத் திறன் குறித்து அவர் பேசி உள்ளார்.

“சூர்யகுமார் எல்லா அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் குவிக்கிறார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பயனுள்ள ஆட்டத்தை விளையாடவில்லை. பாகிஸ்தானின் வேகப்பந்து தாக்குதலா அல்லது வேறு ஏதோவா அதற்குக் காரணம் என்று தெரியவில்லை, ஆனால் இது ஒரு பிரச்சனைதான்,” என்று பாசித் கான் ஜியோ சூப்பர் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

T20 கிரிக்கெட்டின் மிக சிறந்த பேட்ஸ்மன்களில் ஒருவராக இருந்தாலும், சூர்யகுமார், பாகிஸ்தானுக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

அவரது சராசரி 12.80, ஸ்ட்ரைக் ரேட் 118.51. மூன்று T20 உலகக்கோப்பைகள் (2021, 2022, 2024) மற்றும் 2022 ஆசியக் கோப்பை ஆகியவற்றில் அவர் 11, 18, 13, 15, 7 எனக் குறைந்த ரன்களையே எடுத்துள்ளார். இதுவரை 20 ரன்களை கூட கடந்ததில்லை.

இந்த நிலையில், ஆசியக் கோப்பையில் இந்திய கேப்டன் இந்த மோசமான சாதனையை முறியடித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிகரமான ஆடுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்பாக மாறியுள்ளது.