மனைவியை அழைத்து செல்ல முடியாதா... பிசிசி விதிக்கு எதிராக பொங்கிய விராட் கோலி... என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்தி இருந்தது.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ அண்மையில் அமுல்படுத்திய விதிக்கு வெளிப்படையாகவே விராட் கோலி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
அண்மையில், அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி, இது போன்ற முடிவுகள் எடுப்பவர்களை நாம் தள்ளி வைக்க வேண்டும் எனவும், ஒரு தோல்விக்கு பிறகு குடும்பத்தினருடன் நாம் இருக்கும் போது அது எந்த அளவுக்கு நம்மை அமைதிப்படுத்துகிறது என்பதை விவரிப்பது மிகவும் கடினம் எனவும் கூறி இருக்கிறார்.
இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்தி இருந்தது.
அதாவது, 45 நாட்கள் அல்லது அதற்கும் நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது மட்டுமே குடும்பத்தினர் அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு குறைவான நாட்களை கொண்ட வெளிநாட்டு தொடர்களுக்கு குடும்பத்தினர் ஒரு வாரம் மட்டுமே உடன் இருக்க முடியும் என்று விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குடும்பத்தினரின் செலவுகளுக்கான தொகையை அந்த வீரரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மேலும், வீரர்கள் தங்கள் அணியினருடன் ஒரே பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் குறித்து தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ள விராட் கோலி, இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லாத மனிதர்கள் விவாதங்களில் ஈடுபடுவதாகவும், முடிவுகளை எடுப்பதில் முன்னிலையில் உள்ள அவ்வாறான நபர்களை நாம் தள்ளி வைக்க வேண்டும் என்றும் என்றும் கூறினார்.
தோல்வியை அனுபவித்து விட்டு மீண்டும் நமது குடும்பத்தினருடன் வந்து இருக்கும்போது அது எந்த அளவுக்கு நம்மை அமைதிப்படுத்துகிறது என்பதை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என தான் நினைப்பதாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.