ஆஸ்திரேலிய டி20 தொடர்: 'இந்த 3 வீரர்கள் பெரிய சம்பவம் செய்வார்கள்' - சிஎஸ்கே முன்னாள் வீரர் கணிப்பு!
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடரில், இந்திய அணியின் மூன்று வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே எக்ஸ் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடரில், இந்திய அணியின் மூன்று வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே எக்ஸ் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டி20 அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில், இந்திய அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகக் கடைசியாக நடைபெற்ற மூன்று டி20 தொடர்களிலும் இந்திய அணிதான் வெற்றியைப் பெற்றது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியது கடைசியாக 2018/2019ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 தொடரில்தான்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 தொடரில் தொடர்ச்சியாக அபாரமாகச் செயல்பட்டு கோப்பையை வென்ற இந்திய டி20 அணி, நல்ல பார்மில் இருப்பதால், இம்முறையும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. இதனால், நடப்பு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக அபார வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த சுப்ரமணியம் பத்ரிநாத், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில், மூன்று இந்திய வீரர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
அதில், "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய பிட்ச்களில் இந்த மூன்று பேரும்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனக் கூறினார்.
அபிஷேக் சர்மா: சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 தொடரில், அபிஷேக் சர்மா 7 இன்னிங்ஸ்களில் 44.85 சராசரி மற்றும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 314 ரன்களைக் குவித்துள்ளார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இவர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராகத் தொடர்ச்சியாக அபாரமாகச் செயல்படக் கூடியவர் என்பதால், இவரால் அதிக ரன்களைக் குவிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்): கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடைசி 20 டி20 இன்னிங்ஸ்களில், வெறும் 18.33 சராசரியில் மட்டுமே ரன்களை அடித்துள்ளார். மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 100 என்ற அளவில்தான் இருக்கிறது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். இவர் வேகம் குறைந்த பந்துகளுக்கு எதிராகத்தான் அடிக்கடி விக்கெட்டுகளைப் பறிகொடுக்கிறார். இந்த பலவீனத்தைச் சரி செய்து, அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கருதப்படுகிறது.
வருண் சக்ரவர்த்தி: தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, 18 டி20 போட்டிகளில், 12.94 சராசரி மற்றும் 7.23 எகனாமியில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், அவர் 2 முறை 5 விக்கெட்களை வீழ்த்த முடிந்தது. ஐசிசி டி20 பௌலர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இவரால், வேகத்திற்குச் சாதகமான பிட்ச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால், இவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக பத்ரிநாத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி, நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து 2ஆவது போட்டி நவம்பர் 31ஆம் தேதியும், கடைசி 3 போட்டிகள் நவம்பர் 3, 6, 8 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இத்தொடர் முடிந்தப் பிறகு, இந்திய அணி உள்நாட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள், மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
