திடீரென மூடப்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலை; நெருக்கடியில் ஊழியர்கள்
சுமார் 2,000 ஊழியர்கள் தமது தொழில் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதை அடுத்து, 2,000 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நீண்டகாலமாக ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனமான NEXT ஆடை உற்பத்தி தொழிற்சாலை நேற்றுமுதல் அதன் செயல்பாடுகளை காலவரையின்றி மூடியுள்ளது.
இதனால் சுமார் 2,000 ஊழியர்கள் தமது தொழில் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1978 முதல் செயல்பட்டுவரும் இந்த தொழிற்சாலை, ஒரு பிரிட்டிஷ் முதலீட்டுத் திட்டம் என்றும், இந்த நிறுவனம் இலண்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆடைகளை உற்பத்தி செய்வதாக கூறப்படுகின்றது.
எந்த முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தின்படி, இலங்கையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் நிறுவனத்தின் செயல்பாடுகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து குறித்த நிறுவனத்தின் நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.