14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்  பிரபல நிறுவனம்

நோக்கியா நிறுவனம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Oct 19, 2023 - 23:03
14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்  பிரபல நிறுவனம்

நோக்கியா நிறுவனம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து, செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பின்லாந்தைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா சவாலான சந்தை சூழலை எதிர்கொள்ள, செலவுகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.  2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர இலக்கு வைத்துள்ளது.

இதற்காக பணிநீக்க நடவடிக்கையில் இறங்கி இருப்பதால் ஊழியர்களின் எண்ணிக்கை 86,000 லிருந்து 72,000 முதல் 77,000 வரை குறையும் என்று கூறப்படுகிறது.

நோக்கியா, உலகப் பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சிப் போக்கு, மொபைல் ஆபரேட்டர்களால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு செலவுக் குறைப்பு ஆகிய மாற்றங்களால் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது.

நோக்கியாவின் மூன்றாம் காலாண்டு நிகர விற்பனை முந்தைய ஆண்டைவிட 20% குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் லாபமும் முந்தைய ஆண்டைவிட 69% சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சிதான் நோக்கியாவின் செலவு குறைப்பு திட்டம் மற்றும் பணிநீக்க நடவடிக்கைக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நோக்கியாவின் போட்டியாளரான எரிக்சன் நிறுவனமும் செலவுக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 8,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான திட்டத்தை அறிவித்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!