சாலையில் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற 22 வயது இளைஞர் கைது

மெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற 22 வயது இளைஞர் கைது

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் புறநகர்ப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவன் தன் மாற்றாந்தந்தையுடன் பள்ளிக்குச் செல்லும் காரில் இருந்தபோது, 22 வயதான டைலர் மேத்யூ ஜோன்ஸ் என்ற இளைஞர், அந்த காரை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு கார்களுக்கும் இடையில் தகராறு உருவாகி, நெடுஞ்சாலையில் வாக்குவாதம் தீவிரமடைந்தது.

திடீரென ஆத்திரமடைந்த ஜோன்ஸ், தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சிறுவன் அமர்ந்திருந்த பின் இருக்கை திசையில் சுட்டார். குண்டு நேரடியாக சிறுவன் மீது பாய்ந்ததால் அவர் கடுமையாக காயமடைந்தார்.

உடனடியாக தீயணைப்பு மற்றும் அவசர உதவி குழுவினர் சம்பவ இடத்தில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் தெற்கு நெவாடா பல்கலைக்கழக மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு போலீசார் ஜோன்ஸை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.