ரிஸ்க் எடுக்கும் இந்திய அணி.. திட்டத்தை மாற்றுவாரா ரோகித் சர்மா?
இந்த போட்டியிலும் இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடங்கவுள்ளது. புனே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் ஆடும் என்றே பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியிலும் இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது.
அப்படி மாற்றங்கள் இருந்தாலும் நம்பர் 8ல் விளையாடும் ஷர்துல் தாக்கூர் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரில் மட்டுமே மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
டாப் ஆர்டரில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரில் எந்த மாற்றமும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. அதேபோல் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட எந்த வீரரையும் உடனடியாக ஓய்வு கொடுக்க முடியாது. '
இதனால் நம்பர் 4ல் மட்டுமே இந்திய அணியில் மாற்றம் செய்ய முடியும். ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருந்தாலும், அனைத்து போட்டிகளிலும் ஒரே பிளேயிங் லெவனுடன் களமிறங்குவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் 2015ஆம் ஆண்டு இந்திய அணி கேப்டன் தோனி, அரையிறுதி வரை ஒரே பிளேயிங் லெவனுடன் களமிறங்கி, அரையிறுதியோடு வெளியேறினார்.
அதேபோல் ஐபிஎல் தொடரை போலவே உலகக்கோப்பை தொடரும் நீண்ட தொடர் என்பதால் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்று விவாதம் எழுந்துள்ளது.
ஏனென்றால் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டால், அவர்களுக்கு பதிலாக எந்த வீரரை களமிறக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் முடிவு செய்தால் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பெஞ்சில் அமர்ந்திருக்கும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், முகமது ஷமி, அஸ்வின் உள்ளிட்டோரை சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் களமிறக்கி வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஃபினிஷிங் ரோலில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவை, எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க என்று பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |