திரும்பி வந்த ஜடேஜா.. இரண்டு பேருக்கு வந்த ஆப்பு... சிக்கலில் ரோகித் சர்மா!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் யாருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
காயம் காரணமாக கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என்பதால், அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜா முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால், அவரது இடம் அணியில் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, ரவீந்திர ஜடேஜா இந்திய அணி வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் பிளேயிங் லெவனில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் யாருக்கு இடமளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள நிலையில், ராஜ்கோட் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இல்லாமல், விசாகப்பட்டினம் பிட்சை போலவே இருக்கும்.
4 ஸ்பின்னர்களோடு களமிறங்குவது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்பதால், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் ஒருவரை மட்டுமே கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குல்தீப் யாதவ் கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேலை பொறுத்தவரை 2023ல் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
அத்துடன், ராஜ்கோட் மைதானத்தில் விளையாடிய அனுபவம் குல்தீப் யாதவிற்கு இருப்பதால், கேப்டன் ரோகித் சர்மா அவரையே தெரிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |