ஓய்வு அறிவிப்பு எப்போது... வெளிப்படையாக கூறிய ரோஹித்... அதிரடி பேட்டி!

இங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய அணி கைப்பற்றியப் பிறகு, ஓய்வு அறிவிப்பு குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. 

Mar 10, 2024 - 23:33
ஓய்வு அறிவிப்பு எப்போது... வெளிப்படையாக கூறிய ரோஹித்... அதிரடி பேட்டி!

இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஓய்வு  குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய அணி கைப்பற்றியப் பிறகு, ஓய்வு அறிவிப்பு குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த ரோஹித், ''நான் என்று தூங்கி எழும்  போது, கிரிக்கெட் விளையாடுவதை, சோர்வாக நினைக்கின்றேனோ, அன்றே ஓய்வு பெற்றுவிடுவோம். தற்போது, நான் மிகச்சிறப்பான மனநிலையில்தான் கிரிக்கெட் ஆடுகிறேன்'' எனக் கூறினார்.

இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 45.47 சராசரியுடன் 4138 ரன்களை அடித்துள்ளார். அதில், 17 அரை சதம், 12 சதம், ஒரு இரட்டை சதமும் உள்ளது.

அத்துடன், 262 ஒருநாள் போட்டிகளில் 49.12 சராசரியுடன் 10709 ரன்களையும், 151 டி20 போட்டிகளில் 31.29 சராசரியுடன் 3974 ரன்களையும் அடித்துள்ளார்.

ஐபிஎலில் ரோஹித் சர்மா 243 போட்டிகளில் ஆடி, அதில், 29.58 சராசரியுடன் 6211 ரன்களை அடித்துள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், தற்போது 17ஆவது சீசனில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளார். 

எனினும், டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோஹித் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!