கோலி தான் பிரச்சனை... கம்பீர் சொல்லியும் கேட்கலை.. அமித் மிஸ்ரா அதிர்ச்சி தகவல்
லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கை கோலி சீண்டியதால் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே 2023 ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய மோதல் வெடித்தது.
 
                                லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கை கோலி சீண்டியதால் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே 2023 ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய மோதல் வெடித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக அப்போது கவுதம் கம்பீர் இருந்தார். இந்த நிலையில், அந்த அணியில் இடம் பெற்று இருந்த அமித் மிஸ்ரா அப்போது என்ன நடந்தது என்பதை இப்போது கூறி உள்ளார்.
எல்லை மீறி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்களை விராட் கோலி சீண்டிக்கொண்டே இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் கவுதம் கம்பீர் எச்சரித்த நிலையில், அதன் பின்பும் விராட் கோலி நவீன் உல் ஹக்கை திட்டியதால், கம்பீர் பொங்கி எழுந்ததாக அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார்.
"இந்த மோதல் பெங்களூருவில் தான் தொடங்கியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பெங்களூருக்கு எதிராக வெற்றி பெற்றது. அப்போது கவுதம் கம்பீர், அவரது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அப்போது அங்கு இருந்த பெங்களூரு ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.
கவுதம் கம்பீர் அவர்களை அமைதியாக இருக்குமாறு சைகை செய்ய அதை விராட் கோலி விரும்பவில்லை. ஆனால், நாங்கள் அந்த விவகாரம் அந்த போட்டியுடன் முடிந்தது என்று நினைத்தோம். ஆனால், கோலி அப்படி நினைக்கவில்லை.
 
அடுத்து லக்னோவில் நடந்த பெங்களூரு - லக்னோ அணிகளின் போட்டியின் போது, கோலி எங்கள் வீரர்களை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்.
கைல் மயர்ஸை திட்டியதுடன், பந்து வீசிய நவீன் உல் ஹக்கையும் விராட் கோலி திட்டினார். அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார். நானும் நவீன் உல் ஹக்கும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம்.
அப்போது நான் விராட் கோலியிடம், "நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய். நவீன் ஒரு இளம் வீரர். உன் அளவுக்கு மிகப்பெரிய வீரர் இல்லை. என்ன நடந்ததோ அது நடந்து முடிந்து விட்டது. இதை இப்படியே விட்டு விடு" என்று கூறினேன். அதற்கு விராட் கோலி, "இதை நீங்கள் நவீனுக்கு புரிய வையுங்கள்" என்று சொன்னார்."
 
போட்டி முடிந்து நாங்கள் கைகுலுக்கி கொண்டிருந்தபோது, விராட் கோலி நவீன் உல் ஹக்கை மீண்டும் திட்டினார். அப்போதுதான் கவுதம் கம்பீர் அந்த விவகாரத்தில் தலையிட்டார்.
ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனிக்கு மரியாதை கொடுப்பது ஏனெனில், அவர்கள் இளம் வீரர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களை அன்புடன் நடத்துகிறார்கள். கோலி ஆக்ரோஷமாக இருக்கலாம். ஆனால், இப்படி மோசமாக நடந்து கொள்ளக் கூடாது" என்றார் அமித் மிஸ்ரா.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






