ஓபனராக இவரை களமிறக்க வேண்டும்... பிசிசிஐயிடம் ரோஹித் கோரிக்கை.. யார் தெரியுமா?
ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில், ஓபனராக முக்கிய வீரரை களமிறக்க வேண்டும் என பிசிசிஐயிடம் ரோஹித் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஸ்லோ விக்கெட்கள் பிட்ச்கள்தான் அதிகம் என்பதால், ஸ்லோ விக்கெட்டில் அபாரமாக விளையாடக் கூடிய வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும்.
அணிப் பட்டியலை, மே முதல் வாரத்தில் கொடுத்தாக வேண்டும் என்பதால், அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்திய அணி ஓபனர் இடத்திற்கு யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, இந்திய அணி ஓபனருக்கான இடத்தில் விராட் கோலியை சேர்க்க வேண்டும் என ரோஹித் சர்மா கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஷுப்மன் கில்லுக்கு ஒன்டவுன் இடத்தை கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி தற்போது சரியான பார்மில் இருக்கிறார். ஓபனராக களமிறங்கி அடிக்க வேண்டிய பந்தை அடித்து, மற்ற பந்துகளை நிதானத்துடன் எதிர்கொண்டு, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக இருக்கிறார்.
இந்நிலையில், ரோஹித் சர்மாவின் இந்த கோரிக்கைக்கு, அணி மீட்டிங்கின்போதே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பேக்கப் ஓபனராக யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அப்போது நடைபெற்ற அணி மீட்டிங்கில், ஒன்டவுன் இடத்தில் ஷுப்மன் கில்லை களமிறக்கவும் முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோரது இடங்களையும் உறுதி செய்துவிட்டனராம்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |