காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் மனைவி செய்த காரியம்!

உத்தர பிரதேசத்தில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oct 22, 2024 - 11:23
Oct 22, 2024 - 11:23
காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் மனைவி செய்த காரியம்!

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கர்வா சவுத்’ என்ற பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்தாண்டு நேற்று ‘கர்வா சவுத்’ என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கணவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டிய பெண்கள் விரதம் இருந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

அன்றைய நாளில் மனைவிகள் உணவும் தண்ணீரும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். மாலையில் பிரார்த்தனை செய்துவிட்டு தங்களது விரதத்தை முடிப்பார்கள். 

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டம் லால் பகதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைலேஷ் (32). இவரது மனைவி சவிதா. இவர் கணவரின் நீண்ட ஆயுளுக்காக நேற்று காலையில் விரதம் இருந்தார் சவிதா. மனைவியின் இந்த விரதத்திற்கு அவரது கணவர் ஷைலேஷ் குமாரும் உதவியாக இருந்துள்ளார்.

மாலையில் சவிதா விரதத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற சில நேரத்திலேயே அவர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், சில நிமிடங்களில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அவர் சாப்பிட்டு கொண்டே இருக்கும்போதே பக்கத்து வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சவிதா சென்றிருக்கிறார். உணவை சாப்பிட்ட ஷைலேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதற்கிடையில் ஷைலேஷ் சகோதரர் அகிலேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மயங்கிய நிலையில் கிடந்த ஷைலேஷ் குமாரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டாக கூறினார். மேலும், இவருக்கு விஷம் வைத்து கொலை செய்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!