நேரம் வந்துவிட்டது… உலக அரசியல் பதற்றம் காரணமாக உச்சமடைந்த தங்கம் விலை? டிரம்ப் முடிவால் சந்தையில் அதிரடி
அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.
அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள், புவிசார் அரசியல் பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இதன் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 3ஆம் தேதி, வெனிசுலாவை கைப்பற்றியதாக அறிவித்தார். அங்கு “பாதுகாப்பான, நியாயமான ஆட்சி மாற்றம்” நடைபெறும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் கூறியது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யா, கியூபா, ஈரான் உள்ளிட்ட வெனிசுலாவின் நட்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது இறையாண்மை மீறல் என்றும், சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயல் என்றும் அவை கூறியுள்ளன. இந்தப் பதற்றம், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையை மீண்டும் மேலே தள்ளும் சூழலை உருவாக்கியுள்ளது.
ஒரு பக்கம், வெனிசுலா விவகாரத்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்; அதனால் தங்கத்தின் விலை சரியலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் மறுபக்கம், போர் மற்றும் அரசியல் குழப்பம் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரும்புவார்கள் என்ற கருத்தும் வலுவாக உள்ளது.
போர் பதற்றம் – மத்திய கிழக்கின் தாக்கம்
இதற்கிடையே, ஈரான் நாட்டில் உள்நாட்டு அரசியல் குழப்பம் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பல நகரங்களில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, நாணய மதிப்புச் சரிவு, ஊழல் மற்றும் சுதந்திரக் குறைபாடு ஆகியவற்றால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கைதுகள், இணைய முடக்கங்கள், கடும் அடக்குமுறைகள் இருந்தும் போராட்டங்கள் தொடர்கின்றன. கடந்த 40 மணி நேரத்துக்கும் மேலாக ஈரானில் இணைய சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டங்கள் தொழிலாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது. பொருளாதார கோரிக்கைகளாக தொடங்கிய போராட்டங்கள், தற்போது அரசியல் அமைப்பை நேரடியாக விமர்சிக்கும் நிலைக்கு சென்றுள்ளன.
இந்த சூழல், கச்சா எண்ணெய் சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 18% வரை உயர்ந்து, ஒரு பீப்பாய் 79 டாலரை எட்டியது; பின்னர் 77 டாலராக சற்று குறைந்தது. மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் விலை 75 டாலருக்கு அருகில் நிலைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அதிக ஆபத்துள்ள பகுதியாக மாறியதால், கப்பல் காப்பீட்டு கட்டணங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன; சில டேங்கர்கள் தங்கள் பாதைகளை மாற்றி செல்கின்றன.
எண்ணெய் வர்த்தகத்தில் ஆபத்து அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் நீண்டகால இடையூறு ஏற்பட்டால், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 முதல் 130 டாலர் வரை செல்லலாம் என்று JP Morgan, Citi, Deutsche Bank உள்ளிட்ட பெரிய வங்கிகள் எச்சரித்துள்ளன. பதற்றம் தொடர்ந்தால், விலை இதைவிடவும் உயரக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கம் விலை – கண்ணிவெடி போல வெடிக்குமா?
ஈரான்–இஸ்ரேல் மோதல், ரஷ்யா–உக்ரைன் போர் ஆகியவற்றால் உலக பங்குச் சந்தைகள் கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளான தங்கத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்க சந்தையில், ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 0.3% உயர்ந்து $3,442.09 ஆக உள்ளது. இது ஏப்ரல் 22க்கு பிறகு காணப்பட்ட உயர்ந்த நிலையாகும். தங்கத்தின் எதிர்கால விலையும் 0.3% உயர்ந்து $3,461.90 ஆக பதிவாகியுள்ளது.
உலக அரசியல் பதற்றம் தொடர்ந்தால், வரும் நாட்களில் தங்கம் விலையில் “சுனாமி” போன்ற உயர்வு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு சந்தை வட்டாரங்களில் வலுவாக பேசப்படுகிறது.
