இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2024 - Today Rasi Palan

குரோதி வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று (10.08.2024) சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

Aug 10, 2024 - 12:10
இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2024 - Today Rasi Palan

குரோதி வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று (10.08.2024) சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

ஏதாவது ஒரு மனக்கவலை இதயத்தை அழுத்துவதால் தூக்கம் இழப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்ட சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவும் குழப்பமான போக்கால் முடிவு எடுக்க தடுமாறுவீர்கள்.. பணத்தைக் கையாளுவதில் கவனம் இல்லை என்றால் இழப்பை சந்திப்பீர்கள். வியாபாரம் சற்று சறுக்கல் ஆக நடப்பதால் சங்கடப்படுவீர்கள்.

ரிஷபம்

சிறிய தொழில் தொடங்குவீர்கள். அதற்கான அரசாங்கக் கடன் பெறுவீர்கள். வெளிவட்டாரப் பழக்கங்களால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பள்ளிப் பிள்ளைகள் படிப்பில் அக்கறையாக படிப்பீர்கள். அரசாங்க வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் கூடும். காதலிக்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். நண்பரிடம் உதவி பெறுவீர்கள்.

மிதுனம்

திடீரென்று பணம் வந்து திக்கு முக்காடி போவீர்கள். தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வீட்டில் மக்கள் செல்வம், மழலைச் சத்தம் கேட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். கணினித்துறையில் சாதனை நிகழ்த்துவீர்கள். பெரியோர்களின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் வருமானத்தை அதிகரிப்பீர்கள்

கடகம்

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் நகைகள் வாங்கி சந்தோஷப்படுவீர்கள். சகோதர உறவுகள் உதவியால் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமையை விலக்குவீர்கள். அண்டை வீட்டாருடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அடைவீர்கள். தொழிலில் நினைத்ததைவிட லாபம் பெறுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக நடப்பதால் பணவரவு அதிகரித்து மன மகிழ்ச்சி கொள்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் பரபரப்பாக இருக்கும். பங்குப் பரிவர்த்தனையில் பெருந்தொகையை முதலீடு செய்வீர்கள்.

கன்னி

வளர்பிறைச் சந்திரன் என்பதால் நஷ்டங்கள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். சின்னச் சின்னத் தோல்விகளை தாண்டி வருவீர்கள். நீர்க்கட்டி பிரச்சினைக்காக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வீர்கள் . வியாபாரம் சுமாராக நடந்து தொழில் துறைகளில் சிறிய பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். உறவினர்கள் உதவ மாட்டார்கள்.

துலாம்

என்னதான் அக்கறையாக வேலை பார்த்தாலும் மேல் அதிகாரிகள் குறை கூறலுக்கு ஆளாவீர்கள். அவர்களை திருப்திப்படுத்த இயலாமல் திண்டாடுவீர்கள். தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு வராததால் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். . மனைவி குறை சொல்வதிலேயே குறியாக இருப்பதால் வீட்டுக்கு வர விரும்ப மாட்டீர்கள்.

விருச்சிகம்

நல்ல காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். நினைத்த இடத்தில் கேட்ட உதவியை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த இடமாறுதலில் செல்வீர்கள். பழைய கடன்களை அடைக்க வழி தேடுவீர்கள். வாக்குத் தவறாத உங்கள் நடத்தையால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

தனுசு

தொடரும் தோல்விகளை உங்களை விட்டு துரத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவீர்கள். லாட்டரி யோகமும் பெறுவீர்கள். இதமான பேச்சால் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூரிலிருந்து இனிப்பான தகவல் வந்து குடும்பத்தினரோடு குதூகலம் அடைவீர்கள்.

மகரம்

வேண்டாதவர்கள் செய்யும் தீங்கால் விசனப்படுவீர்கள். பழைய பகையால் பாதிப்படைவீர்கள். இருப்பினும் தொழில்துறைகளில் ஏற்றம் காண்பீர்கள். பங்கு பரிவர்த்தனைகளில் கணிசமான பலனைப் பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் விரயச் செலவு ஏற்பட்டாலும் நண்பரின் உதவியால் நன்மை அடைவீர்கள்.

கும்பம்

யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நான் சொல்வதுதான் சரி என்று விவாதம் செய்யாதீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை ஒரு நாள் ஒத்தி வையுங்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாதீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். கடன் வாங்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

மீனம்

வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குவீர்கள். நகை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து குஷிப்படுத்துவீர்கள். இல்லாதவர்களுக்கு பண உதவி செய்து இன்பம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டால் அலுவலகத்தில் அந்தஸ்தை உயர்த்துவீர்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!