இத்தனை வருஷத்துல நான் பார்த்த சூப்பர் போட்டி இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்கவே முடியாது என்ற நிலையிலும் அந்த போட்டியை தனியாளாக நின்று ஜெயிக்க முடியும் என்ற தரமான ஆட்டத்தை கிளென் மேக்ஸ்வெல், ரசிகர்களுக்கு காட்டிவிட்டார்.
கிளென் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தை போல் தனது வாழ்வில் எந்தவொரு கிரிக்கெட் இன்னிங்ஸையும் பார்த்ததில்லை என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்கவே முடியாது என்ற நிலையிலும் அந்த போட்டியை தனியாளாக நின்று ஜெயிக்க முடியும் என்ற தரமான ஆட்டத்தை கிளென் மேக்ஸ்வெல், ரசிகர்களுக்கு காட்டிவிட்டார்.
மும்பை வான்கடேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது.
இதன்பின் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி சாத்தியமே இல்லை என்றே கருத்தப்பட்ட நிலையில், யாருமே எதிர்பாராத வகையில், 9வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கம்மின்ஸுடன் கூட்டணி சேர்ந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக சிறந்த ஒரு இன்னிங்ஸை கிளென் மேக்ஸ்வெல் வெளிப்படுத்தினார்.
கிளன் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 21 பவுண்டரிகளுடன் 201 ரன்களும் எடுத்து வரலாறு படைத்ததோடு ஆஸ்திரேலிய அணிக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று கொடுத்தார்.
மேக்ஸ்வெல் ஆட்டத்தை வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஒரு நிமிடம் திணறி போனார். இதனை போல் எங்கும், எப்போதும் பார்த்ததே இல்லை என்று பிரமித்து பாராட்டினார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலியாவின் தலைவிதியை மாற்ற மேக்ஸ்வெல்லுக்கு கடைசி 25 ஓவர்கள் போதுமானதாக இருந்தது என்றும் தன் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான் என்றும் பாராட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |