22 வயதில் இந்திய அணியில் வாய்ப்பு... தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு கிடைத்த அதிஷ்டம்!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.
22 வயதே ஆகும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற சாய் சுதர்ஷனுக்கு இந்த ஒருநாள் தொடரே அவரது சர்வதேச அறிமுகமாகவும் இருக்கும்.
சாய் சுதர்ஷன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று 2022 ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் 145 ரன்கள் குவித்தார். அடுத்து 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக 8 போட்டிகளில் ஆடி 362 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக இறுதிப் போட்டியில் மூன்றாம் வரிசையில் இறங்கி 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். அப்போதே சாய் சுதர்ஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது.
2023 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், சாய் சுதர்ஷனுக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் ஆரம்ப வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து களமிறங்குவார் என கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தியா ஏ அணியிலும் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார். 2024 டி20 உலகக்கோப்பை முடிந்த உடன் தான் சாய் சுதர்ஷனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரிய வரும்.
IND Vs AUS : முடிஞ்சா இவரை தாண்டி ஜெயிச்சுக்குங்க.. ஆஸ்திரேலிய அணியின் மாஸ்டர் பிளான்.. இந்திய அணிக்கு சிக்கல்
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |