உலகக்கோப்பை தொடரில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பயிற்றுவிப்பாளர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி உள்ளிட்டவை பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் உள்ளிட்டோரை கடந்து ஹாரிஸ் ராஃப் மற்றும் ஹசன் அலி உள்ளிட்டோரின் பந்துவீச்சு மோசமாக அமைந்தது.
அதிலும் ஹாரிஸ் ராஃப் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 80 ரன்களை விட்டுக் கொடுத்தது அதிர்ச்சியை கொடுத்தது.
பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சாளர்கள் மொத்தமாக 50 விக்கெட்டுகளை தான் வீழ்த்தினார்கள். இதனிடையே பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதவி விலகினார்.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் கேப்டன்சியில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக 6 மாத ஒப்பந்தத்துடன் மோர்னே மோர்கல் பதவியேற்று கொண்டார்.