தென் ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தனது 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா 26 பந்துகளில் 63 ரன்கள் அடித்து சிறப்பாக சாதித்தார். 

தென் ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

ஆகமதாபாத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி T20 போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தனது 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா 26 பந்துகளில் 63 ரன்கள் அடித்து சிறப்பாக சாதித்தார். 

அவரது அரைசதம் வெறும் 16 பந்துகளில் முடிந்தது. திலக் வர்மா 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து, ஹர்திக்குடன் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அபிஷேக் சர்மா (34), சஞ்சு சாம்சன் (37) ஆகியோரும் தொடக்கத்தில் நல்ல பங்களிப்பு செய்தனர்.

பதிலடியாக 232 ரன்கள் தேவைப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. குயின்டன் டி காக் (65) தனது அணிக்கு தொடக்க ஆதரவை அளித்தாலும், மற்ற ஆட்டக்காரர்களால் எதிர்பாரித்த ஆதரவு கிடைக்கவில்லை.

இந்திய பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகள், பும்ரா 2 விக்கெட்டுகள் என சிறப்பாக செயல்பட்டனர். ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஹர்திக்–திலக் ஜோடியின் அதிரடி ஆட்டம் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.