சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை... ரோகித் - கோலியால முடியல... ரசிகர்கள் ஆச்சரியம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
சூரியகுமார் யாதவ்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மிகப்பெரிய இலக்கை இந்தியா எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மா எட்டு ரன்களிலும், விராட் கோலி 24 ரன்களிலும், ரிஷப் பண்ட் 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்த நிலையில், சூரியகுமார் யாதவ், ஒரு சாதனையை படைத்திருக்கிறார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சூரியகுமார் படைத்து உள்ளார்.
ரோகித் சர்மா செய்த மோசமான சாதனை.. இது என்னடா சோதனை!
இதற்கு முன்பாக சுரேஷ் ரெய்னா 221 ரன்கள் அடித்திருந்தது சாதனையாக இருந்தது. தற்போது சூரியகுமார் யாதவ் முதலிடம் பிடித்திருக்கிறார்.
சூரியகுமார் யாதவ் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக டி20 சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார்.
ஏனைய வீரர்கள் தடுமாறும் நிலையில் சூரிய குமார் யாதவ் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி காட்டி வருகிறார்.
இந்திய அணியின் ஸ்டார் வீரர் ரிஷப் பண்ட் 194 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 193 ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |