இந்திய அணியை நம்பி ஏமாற்றம்... 34 வயதில் ஓய்வை அறிவித்த வீரர்... அதிரடி முடிவு
2021இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அந்தப் போட்டியிலும் 4 விக்கெட்கள் வீழ்த்தினார் ஷாபாஸ்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஸ்பின்னரான ஷாபாஸ் நதீம் இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். எனினும், இனி இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காது என்பதால் தனது 34 வயதில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.
2019இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆன ஷாபாஸ் நதீம், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெறும் 17.2 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ரோஹித் சர்மா காலமானார்... ராஜஸ்தான் அணிக்காக ஆடியவர்.... என்ன நடந்தது?
ஆனால், அந்த போட்டிக்கு பின் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனினும், உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
2021இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அந்தப் போட்டியிலும் 4 விக்கெட்கள் வீழ்த்தினார் ஷாபாஸ்.
ஆனால், அதன் பின்னும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது.
2019 போல அவரது சொந்த ஊரில் நடக்கும் போட்டியிலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனையடுத்து, 2024 ரஞ்சி தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
அத்துடன், உலகில் நடைபெற உள்ள டி20 தொடர்களில் பங்கேற்க இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |